அந்தரங்கக் கொள்கை

நோக்கம்

இந்தத் தனியுரிமைக் கொள்கையின் நோக்கம், நீங்கள் எங்கள் இணையதளத்தைப் பார்வையிடும்போது bio-oil.com (”நாங்கள்”, “எங்களுடைய”, அல்லது ”எங்களை”) உங்கள் தனிப்பட்ட தரவுகளை எவ்வாறு சேகரிக்கிறது, பயன்படுத்துகிறது, பகிர்கிறது மற்றும் செயலாக்குகிறது என்பதைப் பற்றி விளக்குவதாகும். உங்கள் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கும், உங்கள் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

நாங்கள் சேகரிக்கும் தரவுகள்

நீங்கள் எங்கள் இணையதளத்தைப் பெயரடையாளமின்றி பார்வையிடலாம் என்றாலும், உங்கள் அமர்வை அடையாளம் கண்டறிய குக்கீகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் குக்கீகளும் இதைப் போன்ற தடமறிதல் தொழில்நுட்பங்களும், தனிப்பட்ட முறையில் அடையாளம் காண முடியாத தரவுகளை மட்டுமே சேகரிக்கின்றன மற்றும் செயலாக்குகின்றன. தொடர்புப் படிவம் வாயிலாக நீங்கள் ஒரு விசாரணையைத் தன்னார்வமாகச் சமர்ப்பிக்கும்போது, உங்கள் விசாரணைக்குப் பதிலளிக்கும் நோக்கத்திற்காக மட்டுமே தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தரவுகளை (உங்கள் பெயர், குடும்பப் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி) நாங்கள் சேகரிக்கிறோம்.

நாங்கள் உங்கள் தரவுகளை எப்படிப் பயன்படுத்துகிறோம்

நாங்கள் சேகரிக்கும் தரவுகளை இவற்றிற்காகப் பயன்படுத்துகிறோம்:

  • இணையதளம் திட்டமிட்டவாறு செயல்படுவதை உறுதிசெய்வதற்கு.
  • இணையதளத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், மேம்பட்ட உலாவுதல் அனுபவத்திற்காக உங்கள் முன்னுரிமைகளை நினைவிற்கொள்வதற்கும்.
  • பார்வையிடுபவரின் இருவழித் தொடர்புகளைப் பகுப்பாய்வு செய்வதற்கும், பகுப்பாய்வுகுத் தேவையான அளவீடுகளைச் சேகரிப்பதற்கும்.
  • தொடர்பு விசாரணைகளுக்குப் பதிலளிப்பதற்கு.
  • சட்டப்பூர்வக் கடமைப்பொறுப்புகளுக்கு இணங்கி நடப்பதற்கு.

குக்கீகளை நாங்கள் எப்படிப் பயன்படுத்துகிறோம்

குக்கீகள் என்பவை திறமையாக வழிசெலுத்தவும், குறிப்பிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளவும் பயனர்களுக்கு உதவ நீங்கள் பார்வையிடும் இணையதளங்களால் உங்கள் கணினியில் நிறுவப்படும் சிறு உரைக் கோப்புகள் ஆகும். இணையதளம் முறையாக இயங்குவதற்கு கட்டாயமாகத் தேவைப்படும் குக்கீகளை உங்கள் அனுமதி இல்லாமலேயே நிறுவுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பிற எல்லாக் குக்கீகளும் உலாவியில் நிறுவப்படுவதற்கு முன் அனுமதிக்கப்பட வேண்டும். உங்கள் ஒப்புதலை நீங்கள் எந்த நேரத்திலும் விலக்கிக்கொள்ளலாம் அல்லது மாற்றியமைத்துக் கொள்ளலாம்.

அத்தியாவசியமான குக்கீகள்

அத்தியாவசியமான (அல்லது கண்டிப்பாக அவசியமான) குக்கீகள் தரவுப் பாதுகாப்பு போன்ற முக்கிய இணையதளச் செயல்பாட்டை அனுமதிக்கின்றன. இந்தக் குக்கீகள் இல்லாமல் இணையதளத்தை முறையாகப் பயன்படுத்த முடியாது.

அத்தியாவசியமற்ற குக்கீகள்

நாங்கள் பயன்படுத்தும் அத்தியாவசியமற்ற குக்கீகள் செயல்திறன் குக்கீகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. பகுப்பாய்வுக் குக்கீகள் எனவும் அழைக்கப்படுகின்ற செயல்திறன் குக்கீகள், ஓர் இணையதளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், பயனர்கள் எவ்வாறு அதனுடன் தொடர்புகொள்கின்றனர் என்பதையும் பற்றிய தரவுகளைச் சேகரிக்கிறது. தனிப்பட்ட முறையில் அடையாளம் கண்டறியக்கூடிய தகவல்களை அவை சேகரிப்பதில்லை.

குக்கீகளை எப்படி நிர்வகிப்பது

ஒவ்வொரு முறை குக்கீ அனுப்பப்படும்போதும் உங்களை எச்சரிக்குமாறு அல்லது குக்கீகளை முற்றிலும் மறுக்குமாறு உங்கள் இணையதள உலாவியைக் கட்டமைத்துக் கொள்ளலாம்.

உங்கள் சாதனத்தில் இருந்து குக்கீகளை நீக்குதல்

உங்கள் உலாவியின் உலாவல் வரலாற்றை நீக்குவதன் மூலம், உங்கள் சாதனத்தில் ஏற்கனவே உள்ள எல்லாக் குக்கீகளையும் நீங்கள் நீக்கிவிடலாம். இது நீங்கள் பார்வையிட்டுள்ள எல்லா இணையதளங்களில் இருந்தும் எல்லாக் குக்கீகளையும் நீக்கிவிடும். சேமித்து வைத்துள்ள சில தகவல்களையும் (உ.ம். இணையதளப் பக்கத்தின் முன்னுரிமைகள்) நீங்கள் இழக்க நேரிடும் என்பதை நினைவிற் கொள்ளவும்.

குறிப்பிட்ட தளம் சார்ந்த குக்கீகளை நிர்வகித்தல்

குறிப்பிட்ட தளம் சார்ந்த குக்கீகளை மிக விரிவாகக் கட்டுப்படுத்த, உங்கள் உலாவியில் உள்ள தனியுரிமை மற்றும் குக்கீ அமைப்புகளைப் பார்க்கவும்.

குக்கீகளைத் தடுத்தல்

உங்கள் சாதனத்தில் ஏதேனும் குக்கீகள் இடம்பெறச் செய்வதைத் தடுக்க மிக நவீன உலாவிகளை நீங்கள் அமைக்கலாம், ஆனால் அதன் பின்னர் ஒரு தளத்தை அல்லது பக்கத்தைப் பார்வையிடும் ஒவ்வொரு முறையும் நீங்கள் சில முன்னுரிமைகளைக் கைமுறையாகச் சரிசெய்ய வேண்டியிருக்கும். சில சேவைகளும் செயல்பாடுகளும் முறையாக அல்லது நிரந்தரமாகச் செயல்படாமலும் போகலாம்.

நாங்கள் உங்கள் தரவுகளை எப்படிப் பகிர்கிறோம்

சட்டத்தால் கோரப்படாவிட்டால் தவிர, கீழே குறிப்பிடப்பட்டவற்றைத் தவிர வேறு எந்த மூன்றாம் தரப்பினருடனும் உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் பகிர மாட்டோம்.

Google

பாட்களில் இருந்து பாதுகாக்க Bio‑Oil இணையதளம் Google reCAPTCHA-ஐப் பயன்படுத்துகிறது. இந்த இணையதளம் Google Analytics சேவையின் செயல்பாடுகளையும் பயன்படுத்துகிறது. Google-ஆல் உங்கள் தரவுகள் எவ்வாறு செயலாக்கப்படுகின்றன மற்றும் பாதுகாக்கப்படுகின்றன என்பதைப் பற்றிய பொதுவான தகவல்களை இந்த இணைப்பு–இல் காணலாம்.

ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள Bio‑Oil விநியோகிப்பாளர்கள்

நீங்கள் ஒரு தொடர்புப் படிவத்தைச் சமர்ப்பிக்கும்போது, உங்கள் விசாரணையும் வழங்கப்படும் தனிப்பட்ட தரவுகளும் (அதாவது, பெயர், குடும்பப் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் உங்கள் செய்தியில் நீங்கள் பகிர்கின்ற ஏதேனும் விவரங்கள்) நீங்கள் சமர்ப்பிக்கும் விசாரணைக்குப் பதிலளிப்பதற்காக நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாட்டிற்கான / பிரதேசத்திற்கான அங்கீகரிக்கப்பட்ட Bio‑Oil விநியோகிப்பாளருக்கு அனுப்பப்படுகின்றன. நீங்கள் தகவல்களை வழங்கிச் சமர்ப்பிக்கும்போது அத்தகைய செயலாக்கத்திற்கான உங்கள் ஒப்புதல் அல்லது உடன்பாடு கொடுக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது. உங்கள் தரவுகள் விநியோகிப்பாளருக்கு அனுப்பப்பட்டவுடன், அவர்கள் உங்கள் தனிப்பட்ட தரவுகளின் சுயாதீனத் தரவுக் கட்டுப்பாட்டாளராக ஆகின்றனர். உங்கள் தனிப்பட்ட தரவுகளைப் பொறுப்புணர்வுடனும், பொருந்தக்கூடிய தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமைச் சட்டங்களுக்கு இணங்கவும் செயலாக்குவதற்கு எங்கள் விநியோகிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்யப்படுகின்றது.

தரவுகளைத் தக்கவைத்தல்

உங்கள் தனிப்பட்ட தரவுகளை இந்தக் கொள்கையில் குறிப்பிடப்பட்ட நோக்கங்களுக்காக, அல்லது சட்டத்தால் கோரப்பட்டவாறு தேவைப்படும் காலத்திற்கு மட்டுமே வைத்திருப்போம். தொடர்புப் படிவம் சமர்ப்பித்தல் குறித்த பதிவேட்டை நாங்கள் வைத்திருக்கிறோம், ஆயினும் பெயர், குடும்பப் பெயர் மற்றும் மின்னஞ்சல் முகவரி புலங்களில் உள்ள தரவுகள் 30 நாள்களுக்குப் பிறகு பதிவேடுகளில் இருந்து நீக்கப்படுகின்றன.

உங்கள் உரிமைகள்

நீங்கள் வசிக்கின்ற இடத்தின் அதிகார வரம்பைப் பொறுத்து (சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட விதிவிலக்குகளுக்கு உட்பட்டு), நீங்கள் பின்வரும் உரிமைகளைப் பெற்றுள்ளீர்கள்:

  • உங்களைப் பற்றி நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட தரவுகளுக்கான அணுகலைக் கோருவதற்கு.
  • உங்கள் தனிப்பட்ட தரவுகளை மாற்றியமைப்பதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு.
  • உங்கள் தரவுகளை அழிக்குமாறு அல்லது நீக்குமாறு கோருவதற்கு (”மறக்கப்படுவதற்கான உங்கள் உரிமை”).
  • உங்கள் தரவுகளின் செயலாக்கத்திற்கு ஆட்சேபம் தெரிவிப்பதற்கு, வரையறைப்படுத்துவதற்கு அல்லது கட்டுப்படுத்துவதற்கு.
  • உங்கள் தரவுகளை வேறொரு சேவை வழங்குநருக்கு மாற்றுவதற்கு (தரவு மாற்றத்திற்கான உங்கள் உரிமை).
  • ஒப்புதலை எந்த நேரத்திலும் விலக்கிக்கொள்வதற்கு.
  • உங்கள் நாட்டில் தரவுப் பாதுகாப்பைக் கண்காணிக்கும் ஆணையத்திடம் புகார் அளிப்பதற்கு.

உங்கள் உரிமைகளைப் பயன்படுத்துதல்

உங்கள் உரிமைகளைப் பயன்படுத்த, bio-oil@unionswiss.com -இல் எங்களைத் தொடர்புகொள்ளவும். உங்கள் தரவுகள் ஒரு விநியோகிப்பாளருக்கு அனுப்பப்பட்டிருக்கும்போது, உங்கள் உரிமைகளைப் பயன்படுத்த நீங்கள் அவர்களைத் தொடர்புகொள்வதற்கு எங்களால் உதவ முடியும்.

தரவுப் பாதுகாப்பு

அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது தவறான பயன்பாட்டில் இருந்து உங்கள் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்க மறையாக்கம், பாதுகாப்பான சர்வர்கள், அணுகல் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பொருத்தமான தொழில்நுட்பம் மற்றும் நிறுவனம் சார்ந்த நடவடிக்கைகளை நாங்கள் அமல்படுத்தியுள்ளோம்.

சர்வதேச தரவுப் பரிமாற்றங்கள்

ஐரோப்பிய பொருளாதாரப் பகுதிக்கு வெளியே தரவுகள் பரிமாற்றப்படும்போது, உங்கள் தரவுகளைப் பாதுகாக்க பொருத்தமான பாதுகாப்பு நடைமுறைகள் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். தொடர்புப் படிவம் வழியாக விசாரணையைச் சமர்ப்பித்த EU-இல் உள்ள பயனர்களின் தனிப்பட்ட தரவுகள், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டில்/பிரதேசத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட Bio‑Oil விநியோகிப்பாளருக்கு அனுப்பப்படும், அது தோல்வியுறும் பட்சத்தில் அது எங்களுக்கு அனுப்பப்படும்.

இந்தக் கொள்கையில் செய்யப்படும் மாற்றங்கள்

நாங்கள் இந்தத் தனியுரிமைக் கொள்கையை அவ்வப்போது புதுப்பிக்கலாம். மாற்றங்களானது மாற்றியமைக்கப்பட்ட தேதியுடன் இந்தப் பக்கத்தில் பதிவிடப்படும்.

தொடர்பு விவரங்கள்

இந்தத் தனியுரிமைக் கொள்கை பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் அல்லது உங்கள் உரிமைகளைப் பயன்படுத்த விரும்பினால், எங்களைத் தொடர்புகொள்ளவும்:
Union-Swiss (Pty) Ltd
Bio‑Oil Data Privacy
9th Floor Park on Long
66 Long Street
Cape Town
8001
South Africa
தொலைபேசி: +27 21 424 4230
மின்னஞ்சல்: bio-oil@unionswiss.com
(GDPR நோக்கங்களுக்கு, நாங்கள் செயலாக்கும் தனிப்பட்ட தரவுகளுக்கு நாங்களே தரவுக் கட்டுப்பாட்டாளராகச் செயல்படுகிறோம்.)

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்டது

இந்தத் தனியுரிமைக் கொள்கை கடைசியாக ஜனவரி 2025-இல் புதுப்பிக்கப்பட்டது.

இந்த இணையதளம் முறையாகச் செயல்பட JavaScript தேவைப்படுகிறது.

தயவுசெய்து உங்கள் உலாவி அமைப்புகளில் JavaScript-ஐச் செயல்படுத்தி, பக்கத்தை மீண்டும் திறக்கவும்.