எமது அந்தரங்கக் கொள்கை இல் விவரிக்கப்பட்டுள்ள படி இந்தத் தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. நீங்கள் குக்கீகளின் பயன்பாட்டை ஏற்பதாயின், ஏற்க என்பதைச் சொடுக்குங்கள்.
ஏற்க
அந்தரங்கக் கொள்கை

உங்கள் சாதனத்தில் இந்த இணையத்தளத்தை சரியாகக் காட்சிப்படுத்துவதற்கு நாங்கள் உங்கள் உலாவி விவரங்களைப் பயன்படுத்துகிறோம். நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் மட்டுமே உங்கள் இருப்பிடம், செயல்கள், விருப்பங்கள் என்பவற்றைை நினைவிற் கொள்ள உதவும் சிறிய தரவுக் கோப்புக்களை உங்கள் சாதனத்தில் சேமித்து வைப்போம். இதன் மூலம் எங்களால் உங்கள் பயனர் அனுபவத்தை மேம்படுத்த முடியும். மேற்கண்ட பயன்பாடுகளைத் தவிர, சட்டம் தேவைப்படுத்தினாலன்றி, நாங்கள் உங்கள் தரவை மூன்றாம் தரப்பினருடன் பகிர மாட்டோம்.

Bio‑Oil® / Bi-Oil® / Bioil®

ஆகச் சிறப்பாகப் பலனளிக்கக்கூடிய தயாரிப்பை உருவாக்குவதற்கு, Bio‑Oil நிறுவனம் எணணெய்யைப் பயன்படுத்தி விசேட தோற் பராமரிப்புத் தயாரிப்புக்களை ஆராய்ச்சி செய்து உருவாக்குகிறது. Bi-Oil® என்ற பெயர் பயன்படுத்தப்படுகிற ஆஸ்திரியா, செக் குடியரசு, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்லோவாக்கியா, சுவிட்சர்லாந்து என்பன தவிர மற்ற எல்லா நாடுகளிலும் இந்த எண்ணெய் Bio‑Oil® என அழைக்கப்படுவதுடன் ஜப்பானில் Bioil® என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது.

அறிமுகம்

வடுக்களினதும் தோல் நீட்சி அடையாளங்களினதும் தோற்றத்தை மேம்படுத்த உதவுவதற்கு Bio‑Oil 1987ஆம் ஆண்டில் எண்ணெய்யைப் பயன்படுத்தும் முறையை முன்னெடுத்தது. அந்த நேரத்தில் கடைகளின் அலுமாரியில் இருந்த ஒவ்வொரு தயாரிப்பும் கிரீம் அல்லது லோஷனாகவே இருந்தது. மேலும் நமது தயாரிப்பு பொதுமக்களுக்கு இடையே மிகவும் சந்தேகத்துக்குரியதாக இருந்தது. இன்று நமது தயாரிப்பு வடுவையும் தோல் நீட்சி அடையாளத்தையும் நீக்குவதற்கான உலகின் முன்னணித் தயாரிப்பாகத் திகழ்கிறது. 2010ஆம் ஆண்டில் Bio‑Oil ஒரு சிறப்பு ஆய்வகத்தை அமைத்தது. அது மற்றத் தோற் பிரச்சினைகளுக்குச் சிகிச்சையளிக்க எண்ணெய்யை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை ஆய்வு செய்ய அர்ப்பணிக்கப்பட்டதாகும். 2018ஆம் ஆண்டில் உலர் தோலுக்கான எண்ணெய் அடிப்படையிலான ஜெல் அறிமுகப்படுத்தப்பட்டது, 2020ஆம் ஆண்டில் 100% இயற்கை எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப்பட்ட வடுவையும் தோல் நீட்சி அடையாளத்தையும் நீக்குவதற்கான ஒரு தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. அதிக எண்ணெய் கொண்ட உடல் மருத்து நீர் 2021 இல் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது. உலகெங்கிலும் உள்ள முன்னணி தோற் பராமரிப்பு நிறுவனங்களுக்கு உரிமம் பெற்ற தனது தயாரிப்புக்களின் விற்பனை, விநியோகம் என்பவற்றுடன், Bio‑Oil தனது ஆராய்ச்சியிலும் சிறப்புக் கவனம் செலுத்துகிறது. Bio‑Oil தயாரிப்புக்களைப் பற்றிய தகவலுக்கு, உங்களின் உள்ளூர் மருந்தகத்துக்குச் செல்லுங்கள்.

வடுக்களும் தோல் நீட்சி அடையாளங்களும்

தோலை மேம்படுத்துவதற்கு எண்ணெய் குறிப்பிடத்தக்க அளவு திறன் பெற்றது. எண்ணெய்யின் நன்மைகள் பெரும்பாலும் நாட்டுப்புறக் கதைகள் மூலமாக மட்டுமே அறியப்படுவதால் தான் அதைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளப்படுவதில்லை. Bio‑Oil® Skincare Oil தான் மருத்துவச் சோதனைகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட முதல் எண்ணெய்யாகும், இது வடுக்களினதும் தோல் நீட்சி அடையாளங்களினதும் தோற்றத்தை மேம்படுத்த முடியும் என்பதை நிரூபித்தது. இந்தச் சோதனைகளின் வெற்றிதான் உலகெங்கிலும் உள்ள மருத்துவர்களையும் மருந்தாளர்களையும் இத்தயாரிப்பைப் பரிந்துரைக்கத் தூண்டியது. இன்று Bio‑Oil® Skincare Oil, வடுவையும் சரும நீட்சி அடையாளத்தையும் நீக்குவதற்கான உலகின் முன்னணித் தயாரிப்பாகத் திகழ்கிறது. இதன் பெயருக்கு 400 இற்கு மேற்பட்ட தோற் பராமரிப்பு விருதுகள் கிடைத்துள்ளன. தயாரிப்பு பற்றிய தகவல்

Bio-Oil Skincare Oil ன் தயாரிப்புப் படம்

உலர் தோல்

தோலில் ஒரு மறைமுகமான அடுக்கைக் கொண்டு ஈரப்பதன் வெளியேறுவதை நிறுத்துவது தான் உலர் தோல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான சிறந்த வழியாகும். உலர் தோலுக்கான பாரம்பரியப் பொருட்கள் (கிரீம்கள், லோஷன்கள், வெண்ணெய்) இந்த நோக்கத்துக்காகச் சராசரியாக சுமார் 20% எண்ணெய்யை, மெழுகை அல்லது வெண்ணெய்யைக் கொண்டிருக்கின்றன. இவை Bio‑Oil® Dry Skin Gel-இல் 84% உள்ளடங்கியுள்ளன. Bio‑Oil® Dry Skin Gel 2018 இல் தனது உலகளாவிய விற்பனையைத் தொடங்கியது. தயாரிப்பு பற்றிய தகவல்

Bio-Oil Dry Skin Gel ன் தயாரிப்புப் படம்

வடுக்களும் தோல் நீட்சி அடையாளங்களும் (இயற்கைச் சூத்திரம்)

இயற்கையான உட்பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்து வருவதால், Bio‑Oil இயற்கை எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்தி வடுவையும் தோல் நீட்சி அடையாளத்தையும் நீக்குகின்ற ஒரு தயாரிப்பை உருவாக்கியுள்ளது. இத்தயாரிப்பானது, Bio‑Oil இன் வடுவையும் தோல் நீட்சி அடையாளத்தையும் நீக்குகின்ற மூலத் தயாரிப்பைப் போலவே பயனுள்ளதாக இருப்பதை மருத்துவச் சோதனை முடிவுகள் தெரிவித்தன. ஒரு இயற்கைத் தயாரிப்பு இந்த வகைத் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஒரு தயாரிப்பின் செயற்றிறனுடன் பொருந்தக்கூடியதென நிரூபிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும். Bio‑Oil® Skincare Oil (Natural) தனது உலகளாவிய வெளியீட்டை 2020 இல் தொடங்கியது. தயாரிப்பு பற்றிய தகவல்

Bio-Oil Skincare Oil Natural ன் தயாரிப்பு படம்

உடல் ஈரப்பதனாக்கல்

சிறந்த உடல் ஈரப்பதனாக்கி, உடனடியாக பிசுபிசுப்பை உறிஞ்சி எடுத்து, அதன் கசடுகளைத் தங்க விடாமற் செய்ய வேண்டும். இது உடனடியாக ஆடை அணிந்து தயாராவதைச் சாத்தியமாக்குகிறது. ஈரப்பதனைத் தக்க வைத்துக் கொள்ள தோலின் மீதுள்ள எண்ணெய் அடுக்கு அப்படியே இருக்க வேண்டியது ஈரப்பதனாக்கலுக்கு அவசியம் என்பதால் இது தொழினுட்ப அடிப்படையில் மிகவும் கடினம். Bio‑Oil® Body Lotion ஆனது Bio‑Oil இன் முன்னோடியான பயன்படுத்த முன்னர் குலுக்கும் தொழினுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது, இது மருத்து நீரில் அதிக எண்ணெய்யும் மிகவும் நிறை குறைவாக இருத்தல் ஆகிய இரண்டும் இருக்க வழி செய்கிறது. Bio‑Oil® Body Lotion 2021 இல் தனது உலகளாவிய விற்பனையைத் தொடங்கியது. தயாரிப்பு பற்றிய தகவல்

Bio-Oil Body Lotion ன் தயாரிப்புப் படம்